;
Athirady Tamil News

ரஷ்யாவின் எரிசக்தி தடைகளை தளர்த்திய அமெரிக்கா: “ஆபத்தானது” என ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

0

ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துவது என்பது மிகவும் ஆபத்தானது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக உலகளாவிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

அதை சரிக்கட்டும் விதமாக ரஷ்யாவின் மீதான பொருளாதார தடைகளை(குறிப்பாக எரிசக்தி ஏற்றுமதி) தளர்த்துவதற்கு அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை குறைப்பது என்பது உக்ரைனின் பாதுகாப்பில் சமரசம் செய்வதுடன் நேரடி பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

X தளத்தில் இது தொடர்பாக ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், ரஷ்யாவின் எண்ணெய் விற்பனைக்கு ஆதரவு வழங்குவது என்பது போரை தொடர்வதற்கு ரஷ்யாவிற்கான நிதி ஆதாரமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்செயலாக கூட போரில் ரஷ்யாவிற்கு உதவி விடக் கூடாது என்று மேற்கத்திய நாடுகள் தங்கள் கொள்கையில் உறுதியோடு இருக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம், உக்ரைன் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் இருந்த சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்பி இருப்பதாகவும், இராஜதந்திர செயல்முறைகளை சிக்கலாக்கி இருப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.