யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
யாழ்ப்பாணம் அச்சுவேலி, நிலாவரை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.