யாழில் பொதுமக்கள் வீதி மறியல்: அன்னசந்திர வீதி புகையிரதக் கடவை மூடப்பட்டதற்கு எதிராகப் போராட்டம்!
யாழ்ப்பாணம், அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் குறித்த புகையிரதக் கடவையின் குறித்த போராட்டம் நடைபெற்றது.
போக்குவரத்து சிரமங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, உடனடி தீர்வு கோரியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
