;
Athirady Tamil News

நவீன ஏவுகணைகளுடன் ஹார்மூஸ் ஜலசந்தி அருகே இங்கிலாந்து நாட்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வருகையால் பதற்றம்

0

லண்டன்

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதலால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோகம் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தன்வசம் வைத்துள்ளது. நட்பு பாராட்டும் நாடுகள் தவிர்த்து பிற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என கூறி வருகிறது.

அதனை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்பட கூடிய நிலை காணப்படுகிறது. இதற்கு ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த சூழலில், ஈரானின் அணு ஆயுத தளங்களை செயலிழக்க செய்ய, அமெரிக்காவுக்கு உதவ முன்வர வேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் வைத்த நிலையில், இங்கிலாந்து நாடு அதற்கு உடன்பட மறுத்தது. வேறு நாடுகளும் அதற்கு முன்வராத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், தன்னுடைய குடிமக்கள் மற்றும் கூட்டணி நாடுகளை தொடர்ந்து பாதுகாக்கும் நோக்குடன் என கூறி, அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நவீன ஏவுகணைகளுடன் ஹார்மூஸ் ஜலசந்தி அருகே இங்கிலாந்து நாட்டின் எச்.எம்.எஸ். ஆன்சன் என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வந்து சேர்ந்துள்ளது.

அதில், நவீன ரக ஆயுதங்களுடன், 1,600 கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் கொண்ட தோமஹாக் பிளாக் 4 நில பரப்பை தாக்கும் வகை ஏவுகணைகள் மற்றும் அதிக எடை கொண்ட தொர்பிடோ வகை ஆயுதங்களும் உள்ளன. அது வடக்கு அரபி கடல் பகுதியில் நி நி என நம்பப்படுகிறது. ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என அமெரிக்கா மிரட்டி வரும் சூழலில், மேற்கத்திய நாடுகளின் கப்பல் இந்த பகுதிக்கு வருவது அதிகரித்து உள்ளது. இதனால், பதற்றம் அதிகரித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.