நுவரெலியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு
நுவரெலியா பிரதான எரிபொருள் நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. நேற்று (22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் (23) இன்று காலை முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றன.
அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள போதிலும் நுவரெலியாவில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
கையிருப்பில் இருந்த எரிபொருள் நிறைவுற்ற நிலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.