;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் 18 வயது இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரில் குடும்பம்

0

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

ஏதேனும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.