பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றம் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.