;
Athirady Tamil News

எரிபொருள்; இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய உறுதிமொழி!

0

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

சந்திப்பின் போது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் ரஷ்யா 70 ஆண்டுகால இராஜதந்திர உறவு
ரஷ்ய முதலீட்டாளர்கள் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதை ஊக்குவிக்கவும், ரஷ்யாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சிப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நிலவும் சுமார் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறிப்பாக எரிசக்தித் துறையில் ரஷ்யா வழங்க முன்வந்துள்ள ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.