;
Athirady Tamil News

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

0

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கடமைகளைப் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.