முடிவுக்கு வரும் அரச வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம்
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) முன்னெடுக்கப்பட்டுள்ள 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை காலை நிறைவுக்கு வரவுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வுகள் எட்டப்படாத நிலையில், அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது எந்தவித நியாயமான காரணங்களும் அற்ற, குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு தேசத்துரோகச் செயல் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.