;
Athirady Tamil News

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 மேற்பட்ட மோதல்கள்: தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்யா போர்

0

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட மோதல்களை தடுத்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைனிய ஆயுதப் படைகளின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 148 க்கும் அதிகமான சண்டைகளை ரஷ்ய படைகள் முன்னெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள உக்ரைனிய இராணுவ அதிகாரி, சமீபத்திய காலங்களில் ரஷ்யா தீவிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை மக்கள் குடியிருப்பு பகுதிகளை மட்டும் குறிவைத்து 2,187 தாக்குதல்களை ரஷ்ய ராணுவம் முன்னெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும், 167 வழிகாட்டப்பட்ட குண்டுகள் உக்ரைனிய இலக்குகள் மீது வீசப்பட்டு இருப்பதாகவும், 54 முறை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.