தமிழர் பகுதியொன்றில் பெண்ணுடன் பயணித்த ஒருவருக்கு நடந்தேறிய சம்பவம்
மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாமபிவத்த சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்த பெண்ணும் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மொரவெவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.