தையிட்டி விகாரை காணிகளை மே 15ஆம் திகதிக்குள் அளவீடு செய்வோம் – மாவட்ட செயலர் திட்டவட்டம்
;
தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்து வரைபடங்களை தயாரிக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்களை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து மாவட்ட செயலரும் , கடற்தொழில் அமைச்சரும் இணைந்து கலந்துரையாடி , இன்றைய தினம் காணிகளை அளவீடு செய்வது என தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் , விகாரை காணியை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயற்சிப்பதாக , தையிட்டி விகாரை விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார்.