;
Athirady Tamil News

யுரேனியத்தை தர ஈரான் ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

0

ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அணு ஆயுதம் தயாரிக்க முயல்கிறது என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டாக இருந்த நிலையில், தற்போது யுரேனியத்தை வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பதால் மேற்காசிய போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது: அணு குப்பைகளை எங்களிடம் தர ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. நாங்கள் ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருக்கிறோம். அதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒப்பந்தம் ஏற்பட்டால், எண்ணெய் விநியோகம் சீராகும். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அமைதி ஒப்பந்தம் பாகிஸ்தானில் கையெழுத்தாகும் பட்சத்தில் நான் அந்த நாட்டிற்கு செல்லக்கூடும்” இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.