;
Athirady Tamil News

வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையருக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படலாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமை மற்றும் டொலரின் மதிப்பு உயர்வடைந்துள்ளமைஆகிய காரணங்களால், இந்த அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விலை உயர்வானது அனைத்து வகையான வாகனங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, நடுத்தர மக்களின் பயன்பாட்டில் உள்ள பிரபல வாகனங்களின் விலைகள் கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

அதற்கமைய, ஹொண்டா வெசல், டொயோட்டா ரைஸ்ரக வாகனம், சுஸுகி வேகன் ஆர் ரக வாகனத்தின் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.