தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நேர்ந்த கதி
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் கரிசல் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 09 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 09 பேரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.