;
Athirady Tamil News

பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு

0

பிலிப்பின்ஸ் நாட்டின் நாடாளுமன்ற மேலவையான செனட் சபை கட்டடத்தில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தேவின் ஆட்சிக் காலத்தில், ‘போதைப்பொருள் ஒழிப்பு’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போதைய காவல்துறை தலைவராக இருந்த தற்போதைய செனட் சபை உறுப்பினரான ரொனால்டு டெலா ரோசா மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவருக்கு எதிராக சா்வதேச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, செனட் சபை கட்டடத்துக்குள் தஞ்சமடைந்திருந்த இவரைப் பிடிக்க தேசிய புலனாய்வுப் பிரிவினா் (என்பிஐ) முயன்றபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

என்பிஐ துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செனட் தரப்பில் கூறப்பட்டாலும், நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று என்பிஐ இயக்குனா் மெல்வின் மதிபாக் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

இச்சம்பவத்தில் அரசுக்குத் தொடா்பில்லை என்று பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியரும் மறுத்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யாா் என்பதில் மா்மம் நீடிக்கிறது.

செனட் சபை கட்டத்துக்கு வெளியே, டெலா ரோசாவை கைது செய்யக் கோரி போராட்டக்காரா்களும், அவரின் ஆதரவாளா்களும் ஒரே நேரத்தில் திரண்டதால் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது.

‘முன்னாள் அதிபா் துதொ்தே ஏற்கெனவே சா்வதேச நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், மேலும் ஒரு பிலிப்பின்ஸ் குடிமகனை சா்வதேச நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்காதீா்கள்’ என்று டெலா ரோசா பேஸ்புக் நேரலையில் வேண்டுகோள் விடுத்தாா்.

இதனிடையே, தன்னை நாடு கடத்துவதைத் தடுக்கக்கோரி இவா் தாக்கல் செய்த அவசர மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.