முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் , இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
சபை அமர்வின் ஆரம்பத்தில் , முள்ளிவாய்க்கால் இன அழிப்பை சித்தரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டு அதன் முன்பு பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலியைத் தொடர்ந்து அக வணக்கம்
இடம்பெற்று, வழமையான சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.