;
Athirady Tamil News

நீண்டகால சேவைக்கு கௌரவம் ; மின்சார சபை ஊழியர்களுக்கு விசேட திட்டம்

0

மின்சார சபையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் 1,898 ஊழியர்களுக்கு 8.5 பில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார சபை
இதுதொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகாலமாக மின்சார சபையில் பணியாற்றி, விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் தேர்வு செய்த ஊழியர்களின் சேவையை கௌரவிக்கும் நோக்கில் இந்த விசேட இழப்பீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிறுவனத்திற்காக சேவையாற்றிய ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் “பெருமைமிகு சேவை – பாதுகாப்பான முடிவு” (A Proud Service – A Safe End) என்ற கருப்பொருளின் கீழ் நாளை (15) விசேட நிகழ்வு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.