;
Athirady Tamil News

அமெரிக்காவுக்குள் இந்தியர்களைக் கடத்தும் நபர்: அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்

0

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இந்தியர்களைக் கடத்தும் நபர் ஒருவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024க்கும் 2025க்கும் இடையில், ஷிவம் (22) என்னும் இந்தியர், இந்தியர்களை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்த உதவியதாக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்ததும், அவர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு செல்வதற்கு ஷிவம் டெக்ஸிகளை ஏற்பாடு செய்துள்ளதும், அந்த டெக்ஸி சாரதிகள் அவர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் விட்டுவிடுவார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியர்களைக் கடத்தியதற்காக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், தனக்கு உதவிய சாரதிகளுக்கு ஷிவம் ஆளுக்கு 100 டொலர்கள் கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஷிவம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறையில் செலவிடவேண்டிவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.