;
Athirady Tamil News

அக்டோபர் 7 தாக்குதல், ஹமாஸ் பணய கைதிகளை சிறைபிடித்த முக்கிய தளபதி படுகொலை: இஸ்ரேல்

0

டெல் அவிவ்

இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு தலைவரான இஜ் அல்-தின் அல்-ஹத்தத் என்பவர் காசா நகரில் நடந்த வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார்.

இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான செய்தியில், முகமது சின்வார் கொல்லப்பட்டதும், அந்த பதவியை ஹத்தத் ஏற்று கொண்டு, ஹமாஸ் அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்ததுடன், இஸ்ரேல் மக்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டார் என்று தெரிவித்து உள்ளது.

பணய கைதிகளை பிடித்து, அவர்களை தனக்கு பக்கத்திலேயே அவர் வைத்து கொண்டார். இதனால், காசா போரின்போது அவரை இஸ்ரேல் படையினர் தாக்காமல் விட்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டு உள்ளார் என்று தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.