யாழ். பேருந்து நிலையத்தில் 28 வயதான இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு
யாழ்ப்பாணம் நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நெல்லியடி பேருந்து நிலையப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர் இராஜகிராமம், ஆண்டாள் வளவு, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பிறேமதாஸன் பிறேம்நாத் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூவர் அடங்கிய குழுவினர் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கியதில் தலை, கை, கால் மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த நபர் முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.