;
Athirady Tamil News

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்

0

இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று இரவு (18) இலங்கை வந்தடைந்துள்ளார். அவர் மே 21 வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று காலை பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்தில் அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், விமானப்படைத் தலைமையகத்திற்கு வந்தடைந்த அவரை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கு இடையே உத்தியோகப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது. பின்னர் அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரையும் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளையும் பரஸ்பர நட்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பயணத்தின்போது, அவர் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.