;
Athirady Tamil News

எச் 1 பி விசா விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

அமெரிக்காவில் நடப்பாண்டில், ‘எச் – 1 பி’ விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 38.50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், ‘எச் 1 பி’ விசா நடைமுறைகளில் கடுமை காட்டினார்.

அந்த விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார். இதையடுத்து, ‘எச் – 1 பி’ விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் குறைந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடப்பாண்டில், ‘எச் – 1 பி’ விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 38.50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: கடந்தாண்டில், 3.44 லட்சமாக இருந்த ‘எச் – 1 பி’ விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, நடப்பாண்டில், 2.12 லட்சமாக குறைந்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் பணிபுரிவதற்கான ஆர்வம் குறைந்து விட்டது என்பது பொருளல்ல. மாறாக, விசா முறைகேடுகளை தடுக்க கொண்டு வரப்பட்ட முக்கிய விதிகளே காரணம்.

அதிக சம்பளம் பெறும் தகுதியுடைய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், குறைந்த சம்பளத்தில் ஆட்கள் தேர்வு செய்யும் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால், ‘எச் – 1 பி’ விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவு கண்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.