;
Athirady Tamil News

மகள் வீடு சென்ற தந்தை கொடூரமாக கொலை; நடந்தது என்ன!

0

மொனராகலை -ஹிங்குருகடுவ, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிவெஸ்ஸ பிரதேசத்தில், பாக்கு வெட்டும் கத்தியால் இரு கால்களின் முழங்காலுக்கு கீழ், பின் பகுதி வெட்டப்பட்டு ஆபத்தான நிலையிலிருந்த நபரொருவர் திங்கட்கிழமை (25) அன்று உயிரிழந்துள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, மயிலகஸ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த டி.எம். சிறில் திஸாநாயக்க (69) என்ற ஓய்வுபெற்ற மருத்துவமனை ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஓய்வுபெற்ற மருத்துவமனை ஊழியர்
இவர் ஹிங்குருகடுவ, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிவெஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு வந்திருந்ததாகவும், கடந்த 24ஆம் திகதி மாலை மகளின் காணியிலுள்ள தோட்டத்தின் கீழ் பகுதிக்குச் சென்றதாகவும் தெரியவருகிறது.

எனினும், அவர் மீண்டும் திரும்பி வராததால் தேடிப் பார்த்தபோது, இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் விழுந்து கிடந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், ஆம்புலன்ஸ் வண்டி மூலம் புத்தள பிரதேச வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அந்த நேரத்திலேயே அவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குருகடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.