;
Athirady Tamil News

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

0

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. Advanced Level) பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இவ்வாண்டுக்கான உயர்தரப் பரீட்சை செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்படும் பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடத்தப்படவுள்ளதுடன், பரீட்சை தொடர்பான விரிவான கால அட்டவணை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தேவையான ஆயத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளுமாறும், பரீட்சை தொடர்பான அறிவிப்புகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் மூலம் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.