;
Athirady Tamil News

20 வயது தந்தையை கொன்றவர்களுக்கு 24 வருடத்தின் பின் கிடைத்த அதிரடி தண்டனை

0

சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் ஒருவரை வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கிப் படுகொலை செய்த வழக்கில், இரு குற்றவாளிகளுக்குக் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (12) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

புளத்சிங்கள, யடகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பிரியதர்ஷன மற்றும் பிரதீப் புஷ்பகுமார ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில், புளத்சிங்கள யடகம்பிட்டிய பகுதியில் தனிப்பட்ட பகைமையின் காரணமாக, 20 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையை தலைப் பகுதியில் வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கிப் படுகொலை செய்தமைக்காக, சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட காலமாக இடம்பெற்று வந்த இவ்வழக்கின் இறுதியில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.