தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்தில் பலியான 6 பிள்ளைகளின் தந்தை ; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) இரவு கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்தது.
அத்துடன் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலமானது அண்மையில் நல்லடக்கத்திற்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.