;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

0

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர் (VietJet Air), கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இடையே தனது நேரடி விமான சேவைகளை இன்று(20) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புதிய விமான வழித்தடமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விமான சேவைகள்
இதன்படி, வியட்ஜெட் ஏர் நிறுவனம் இவ்விரு நகரங்களுக்கும் இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், இரு நாடுகளும் இணைந்து கூட்டு சுற்றுலா தொகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.