;
Athirady Tamil News

பாகிஸ்தானில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலி

0

லாகூர்,

பாகிஸ்தானில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டத்தை சேர்ந்த 57 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

7 பேர் பலி

அம்மாவட்டத்தின் சர்தார் கர் பகுதியில் சென்றபோது சாலையில் வேகமாக வந்த லாரி டிராக்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9 பேர் பலி

அதேபோல், அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் இருந்து நேற்று லாகூருக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 29 பேர் பயணித்தனர். சிந்து மாகாணம் ஜகோப்பாத் மாவட்டம் தால் நகர் அருகே வேகமாக சென்ற பஸ் சாலை அருகே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 70 பேர் படுகாயமடைந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.