;
Athirady Tamil News

36 ஆண்டுகால காத்திருப்பு: தமது காணிகளை விடுவிக்கக்கோரி வசாவிளான் மக்களும் போராட்டம் ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலி.வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியேற்றப்பட்ட மக்கள் 36 வருடங்கள் கடந்தும், அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள திரும்ப அனுமதிக்கப்படவில்லை.
குறித்த பகுதிகள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது சொந்த காணிகளுக்கு திரும்ப முடியாத நிலையில் , வாடகை வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்களாக தம்மை தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி போராடி வருகின்றனர்.
இந்நிலையில் வலி. வடக்கை சேர்ந்த மூன்று கிராம மக்கள் தமது காணிகளை விடுக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில், மயிலிட்டி கிராம மக்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் பலாலி மக்கள் பிரதி ஞாயிற்றுகிழமைகளிலும் போராடி வரும் நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் வசாவிளான் மக்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இதுவரையிலான கால பகுதியில் யாழ்.மாவட்டத்தில் சுமார் 60 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.