;
Athirady Tamil News

மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த சம்பவம்

0

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தகராறு ஆனது.

தீவிர விசாரணை
இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் காரில் புறப்பட்ட கணவர், வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அவரை காரில் வைத்து கொலை செய்தார். கொலை செய்வதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், கேசகோடு கிராமத்துக்கு சென்ற ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கொலை வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பினார். தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு இணைப்பை தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை.

இதையடுத்து, கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.