யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர்.
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சகோதரிகள் நேற்றையதினம் (01) வீட்டில் யாரும் இல்லாதவேளை தமக்கு தாமே தீ மூட்டியுள்ளனர்.
சுன்னாகம் காவல்துறையினர் விசாரணை
இந்நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று (02) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.