4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை
இந்த அறிவிப்பு நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இன்று (03) இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் பச்பாகே கோரளே மற்றும் கங்க இஹள கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல்
கீழ்கண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிற்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மேற்கு இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.