டிக்கோயாவில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்; மக்களே அவதானம்
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாயி பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, கால்வாயின் இருபுறமும் உள்ள பல வீடுகளும் ஒரு வாகனம் திருத்தும் நிலையமும் (03) நீரில் மூழ்கியுள்ளது.
அதேவேளை 2013ஆம் ஆண்டிலும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதால் காரணமாக இதேபோன்று ஒரு பேரழிவு ஏற்பட்டதாகவும், மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.