;
Athirady Tamil News

சீரற்ற வானிலை ; நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளைப் புதுப்பித்துள்ளது.

அதன்படி, மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பிரதேசங்கள் இரண்டாம் கட்டத்தின் கீழும், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய பிரதேசங்கள் முதல் கட்டத்தின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மண்சரிவு எச்சரிக்கை
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரல பிரதேச செயலகப் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி மாவட்டத்தின் தொளுவ, பன்வில, மெததும்பறை, உடபலாத்த, கங்க வட்ட கோரளை, உடுதும்பறை மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகங்களும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகங்களும் முதல் கட்ட எச்சரிக்கையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனவே, இப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானத்துடன் செயற்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.