;
Athirady Tamil News

இஷாரா செவ்வந்தி சிறைச்சாலையில் இருந்து இடம் மாற்றம்!

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றின் திறந்த நீதிமன்றக் கூண்டிற்குள் வைத்து, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

இக்கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த அவரை, விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று கைது செய்து நாட்டிற்கு அழைத்து வந்தது.

அதன் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.