;
Athirady Tamil News

வீதியில் அநாதரவாக விடப்பட்ட சிறுமி; தாயாரும் கள்ள காதலனும் கைது!

0

வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (13) வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சிறுமியை வத்தேகம பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் தாயாரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று (14) ஹாலிஎல – கெட்டவல வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.