கண் திறந்து பார்த்த அம்மன்: அற்புத நிகழ்வு
தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.
கண்திறந்து காட்சி கொடுத்த அம்மன்
நெல்லை மேல ஊருடையார்புரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
100 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் சாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தெய்வீக சக்தி வாய்ந்த அம்மனாக அருள்பாலிக்கிறார்கள்.
அம்மன்கள் திடீரென கண் திறந்து பார்த்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை காண பக்தர்கள் படையெடுத்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.