;
Athirady Tamil News

வடக்கு வைத்தியசாலைகளுக்கு , 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள்

0
செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. நடைபெற்றது. 
கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வியந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா வழங்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும்.
 அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.