;
Athirady Tamil News

சமூக ஊடகங்களில் பிரபலமான இளம் பெண் ; மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்!

0

இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த ஜூன் மாதம் அவர் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவர் ஆகஸ்ட் 26-ம் தேதி சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இரண்டு மாதங்கள் உயிருக்கு போராடிய இளம் பெண்
மஞ்சீத்தின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், அவரது தோழி, “அவர் விரைவில் நடந்ததை அவருடைய வார்த்தைகளிலேயே உங்களிடம் சொல்வார்” என்று கூறியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

அவரது தாயார் அளித்த புகாரின்படி, ஜூலை 3-ம் தேதி சண்டிகரின் செக்டர் 34 பகுதியில் இருவரை சந்திக்க சென்ற மஞ்சீத்தை, ஷுபி மற்றும் பிண்டா ஆகியோர் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டம் மொரிந்தாவுக்கு அழைத்து சென்று தாக்கி, மரத்தில் கட்டி தீ வைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்த நண்பர் ஒருவர் போர்வையை பயன்படுத்தி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது. பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மஞ்சீத், ஆகஸ்ட் 5-ம் தேதி சிறிது நேரம் சுயநினைவு பெற்று குடும்பத்தினரிடம் சம்பவத்தை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

CCTV காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.