காக்கைதீவு , சாவற்கட்டு இறங்குதுறை புனரமைப்புக்கு முதல் கட்டமாக 2.1 மில்லியன் ரூபாய் நிதி
;
இதனடிப்படையில், இறங்குதுறையில் தேங்கியுள்ள பாசிகளை அகற்றி தூய்மைப்படுத்துதல், மண் நிரப்பி இறங்குதுறையைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கடற்றொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றி தமது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.
இறங்குதுறை புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மாவட்ட செயலர் ம. பிரதீபன், பிரதேச செயலாளர், கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கடற்றொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்த பெருமளவான கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Prev Post
கேரளம்: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் 13-ந்தேதி 400-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு முன்பதிவு
Next Post