;
Athirady Tamil News

வெள்ள பாதிப்பு: 6,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை- நேபாள அரசு தகவல்

0

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை-பாறைச் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போடோகோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் பேரழிவை சந்தித்தது. வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றதுடன் நீர்மின் திட்டங்களையும் சேதப்படுத்தியது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.சித்வான் மாவட்டத்தில் 367, மேற்கு நவல்ப்ரசியில் 222, கிழக்கு நவல்ப்ரசியில் 232, நுவாகோட்டில் 203 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் ராசுவாவில் 236, கோர்க்காவில் 79, தாதிங்கில் 72, தனஹுவில் 38 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். இதுவரை, நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13,784 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்திற்குப் பிறகு 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நீர்மின் திட்டப் பகுதிகள், ஆறுகள், இடிபாடுகள் நிறைந்த பகுதிகளில் காணாமல் போனவர்களுக்கான தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளத்தால் சீனப் பகுதியில் 43 பேர் உயிரிழந்தனர்; அங்கு 500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என சீன ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.