;
Athirady Tamil News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இன்று காலை (21) விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ஒரு பேருந்தும், மேலும் பல வாகனங்களும் இந்த விபத்தில் மோதிக்கொண்டுள்ளன.

கடும் போக்குவரத்து நெரிசல்
இதன்போது ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பேருந்துகளுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தினை தொடர்ந்து, கொழும்பு நோக்கிச்செல்லும் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், வாகன போக்குவரத்து ஒருவழி பாதையாக தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.