;
Athirady Tamil News

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

0
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
 
மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் , படகினை கைப்பற்றியுள்ளனர் 
 
குறித்த படகினுள் , பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டதை அடுத்து , படகினை கரைக்கு கொண்டு வந்து , படகில் இருந்த  பெருந்தொகையான கஞ்சாவை மீட்டுள்ளனர். 
 
அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் 
 
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.