;
Athirady Tamil News

துருக்கியில் ரிக்டர் 5.1 அளவில் பயங்கர நிலநடுக்கம்

0

அங்காரா,

உலகில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக துருக்கி உள் ளது. அங்குள்ள புவித்தட்டுகள் அடிக்கடி நகர்வதால், மிதமான மற்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், துருக்கியின் கிழக்கு பகுதியில் நேற்று பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள், தங்கள் உயி ரைக் காத்துக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்த னர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.