;
Athirady Tamil News

வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு விழா

0
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும்  பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டு விழா 2026”, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கரணவாய் மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில், “எழுத்து சீர்காழி சங்கீதபூஷணம்” செல்லத்துறை குமாரசாமி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்  இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் சிறப்பு விருந்தினராகவும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்  மாலினி கிருஷ்ணானந்தன், கரவெட்டி கிழக்கு இசைநாடகக் கலைஞர் “கலாபூஷணம்” காசியன் வீரபுத்திரன் மற்றும் அல்வாய் நாடகக் கலைஞர் “கலாபூஷணம்” மாணிக்கம் அனந்தராசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, கலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மூத்த மற்றும் இளம் கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் கலைமன்றங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.