;
Athirady Tamil News

பராகுவே மீது சீனா பொருளாதாரத் தடை விதிப்பு

0

பீஜிங்,

பராகுவே மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

தைவானுடன் தூதரக உறவைத் தொடர்வதால் பராகுவே, பெலீஸ் நாடுகள் மீது சீனா அதிரடி பொருளாதாரத் தடை விதித்துள்ளது. பராகுவே தகவல் தொழில்நுட்ப மந்திரி குஸ்தாவோ வில் லேட், பெலீஸ் வெளியுறவு மந்திரி பிரான்சிஸ் பொன்சேகா ஆகியோருக்கு சீனாவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர்கள் சீனா, ஹாங்காங், மக்காவ் நாடுகளுக்குள் நுழையப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்ற நாடுகளுக்கு இதுவொரு எச்சரிக்கை என சீன வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

உலகளவில் தைவானை ஆதரிக்கும் 12 நாடுகளில் இவ்விரு நாடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.