;
Athirady Tamil News

கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து 14 பேர் பலி

0

கொலாம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து 14 பேர் உயிரிழந்தனர்.

கொலம்பியாவின் நாரினோ மாகாணம் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகரத்திற்கு அருகே தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. இது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தது. இந்தநிலையில் தங்க சுரங்கம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். உடனே மீட்புக்குழுக்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டன.

இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பணிகள் முழுவதும் நிறைவடைந்ததாக நாரினோ கவர்னர் லூயிஸ் அல்போன்சோ தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதமும் நாரினோ மாகாணத்தின் பொலிகார்பா நகரில் இதேபோன்ற சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழந்திருந்துள்ளனர். கொலம்பியாவின் கிராமப்புறங்களில் முறையான பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் இன்றி இயங்கும் ஒழுங்கமைக்கப்படாத சுரங்கங்களால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.