;
Athirady Tamil News

இந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

0

வருங்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்பவா் இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்க வாய்ப்புள்ளதால், இந்தியா, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் மூலம், அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகுவை மீண்டும் தோ்ந்தெடுக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் அந்நாட்டுக்கான பாதுகாப்புக் கொள்கையை பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டு, அண்மையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவுக்குப் புதிய அதிபா் தோ்ந்தெடுக்கப்படுவாா்.

அவா் இஸ்ரேலுக்கு மிகவும் விரோதமானவராக இருந்தால், என்ன செய்வது? அமெரிக்காவுடன் எப்படி நடந்துகொள்வது? அதிபராக டிரம்ப் இருக்கும் காலத்திலேயே இஸ்ரேல் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வருங்காலத்தில் அமெரிக்காவின் கொள்கை மாறினாலும், அதைச் சமாளிக்க இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு சாதகமான சூழல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தம்மால் முடிந்த அனைத்தையும் 4 ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் செய்ய வேண்டும்.

அத்துடன் இந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணிகளை இஸ்ரேல் உருவாக்க வேண்டும். இதற்காக மேற்காசியா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள பல நாடுகளுடன் நான் பேசி வருகிறேன்.

பல நாடுகளுடன் இஸ்ரேல் கூட்டணி அமைக்க வேண்டும். எல்லா நாடுகளுக்கும் பயனளிக்கும் நாடாக இஸ்ரேல் வளர வேண்டும் என்று தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.